உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குப்பை சேகரிக்க மின்கல வாகனங்கள்

குப்பை சேகரிக்க மின்கல வாகனங்கள்

செஞ்சி : செஞ்சி பேரூராட்சியில் 15 லட்சம் ரூபாய் செலவில் குப்பை சேகரிப்பதற்கான மின்கல வாகனங்கள் இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.செஞ்சி பேரூராட்சியில் பொது நிதியில் ரூ.19.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு கூடுதல் கட்டடங்கள் திறப்பு மற்றும் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் குப்பை சேகரிக்க 7 மின்கலன் வாகனங்களை இயக்கி வைக்கும் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.பேரூராட்சி சேர்மன் மொக்தியார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார். அமைச்சர் மஸ்தான் புதிய கட்டடங்களை திறந்து வைத்து, மின்கல வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் துாய்மைப் பணி மேற்பார்வையாளர் பார்கவி, கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை