| ADDED : ஜூலை 23, 2024 11:10 PM
திண்டிவனம் : திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பம் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரில் ரத்ததான முகாம் நடந்தது.கல்லுாரியின் நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம் சார்பில் நடந்த ரத்ததான முகாமிற்கு, கல்லுாரி முதல்வர் வீரமுத்து தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செந்தமிழ்சோழன் வரவேற்றார். முதன்மை நிர்வாக அலுவலர் சிவக்குமார், நிர்வாக அலுவலர் சிவா வாழ்த்திப் பேசினர்.ராமதாஸ் கல்வி அறக்கட்டளை அறங்காவலர் குழு தலைவர் மணி எம்.எல்.ஏ., முகாமை தொடங்கி வைத்து பேசினார்.முகாமில், தொழில் அதிபர் சுப்பராயலு, பா.ம.க., மாவட்ட செயலாளர் ஜெயராஜ், நிர்வாகி ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து அரசு மருத்துவர்கள் தீபிகா, விவேகானந்தன், ரெட் கிராஸ் சொசைட்டி தண்டபாணி முன்னிலையில் ரத்ததானம் நடந்தது. கல்லுாரியை சேர்ந்த 86 மாணவர்கள் ரத்ததானம் செய்தனர்.உடற்கல்வி இயக்குனர் மருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். செஞ்சிலுவை சங்க பொறுப்பாசிரியர் ராமு நன்றி கூறினார்.