உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

விழுப்புரம், : விழுப்புரம் அருகே மனைவியை தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த கொய்யாதோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ், 45; கூலித் தொழிலாளி. இவரது மனைவி பானுபிரியா, 39; இருவருக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கணவன், மனைவிக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 மாதங்களாக பானுபிரியா, அய்யூர் அகரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் பானுபிரியா, தனது மகன் லோகபரணி பயிலும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு சென்ற போது, அங்கு வந்த ஆனந்தராஜ் மனைவி பானுபிரியாவிடம் தகராறு செய்து தாக்கினார்.பானுபிரியா அளித்த புகாரின் பேரில், ஆனந்தராஜ் மீது விழுப்புரம் தாலுகா போலீசார், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை