உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிலம்பம் பயிற்சி முகாம் நிறைவு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

சிலம்பம் பயிற்சி முகாம் நிறைவு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

விழுப்புரம்: விழுப்புரத்தில் டி.என்.ஆர்.எஸ்., அன்பு சிலம்பம் மற்றும் கராத்தே அறக்கட்டளை சார்பில் சிலம்பம் பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.விழுப்புரத்தில் டி.என்.ஆர்.எஸ்., அன்பு சிலம்பம் மற்றும் கராத்தே அறக்கட்டளை சார்பில் சிலம்பம் பயிற்சி முகாம் நடந்தது. கடந்த மே 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடந்த பயிற்சியில், சிலம்பத்தில் ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, மான் கொம்பு, வேல் கம்பு, அலங்கார சிலம்பம், தீ சிலம்பம், வாள் வீச்சு, சுருள் வாள், போர் சிலம்பம், குத்து வரிசை ஆகியவை கற்றுத்தரப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.சிலம்பம் பயிற்சியாளர்கள் கலைச்செழியன், ரவி, அன்பரசி ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியை முடித்த மாணவ, மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, முன்னாள் ரோட்டரி தலைவர் கந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி வாழ்த்தினர். நிகழ்ச்சியில், பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி