உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண்ணிடம் செயின் பறிப்பு மர்ம நபர்களுக்கு வலை

பெண்ணிடம் செயின் பறிப்பு மர்ம நபர்களுக்கு வலை

விழுப்புரம்: பைக்கில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 3 சவரன் நகையை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.புதுச்சேரி, உப்பளத்தை சேர்ந்தவர் பழனிராஜா,55; இவர் நேற்று தனது மனைவி காந்திமதியுடன், விழுப்புரம் அடுத்த சிந்தாமணியில் உள்ள உறவினர் வீட்டிற்கு பைக்கில் புறப்பட்டார். இரவு 8:30 மணிக்கு சிந்தாமணி மேம்பாலம் அருகே சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த 25 வயது மதிக்கத்தக்க இரு வாலிபர்கள், காந்திமதி கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் நகையை பறித்து சென்றனர்.அதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்த பழனிராஜா மற்றும் காந்திமதியை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி