உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

விழுப்புரம் : விழுப்புரம் மின்வாரிய அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.விழுப்புரம் மின்வாரிய அலுவலகத்தில் 26 ஆண்டுகள் பணிபுரிந்து, நகரம்-1 பிரிவு அலுவலக மின் பாதை ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா, விழுப்புரம் மின்வாரிய நகர அலுவலகத்தில் நடந்தது. செயற்பொறியாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். உதவி மின் பொறியாளர் பிரபாகர், இளநிலை பொறியாளர் ரவீந்திரன் மற்றும் உபகோட்ட பிரிவு அலுவலர்கள், ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் வாழ்த்திப்பேசினர். சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை