| ADDED : ஜூன் 19, 2024 01:20 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் 80 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்விக்கான ஆலோசனை மற்றும் பதக்கம் வழங்கும் விழா நடந்தது.விஸ்வகர்ம பொன், வெள்ளி ஆபரணத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு, சங்கத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். தியாகராஜ பாகவதர் நற்பணி மன்ற தலைவர் சேகர் வரவேற்றார். முன்னாள் தலைவர்கள் ராமதாஸ், ஆதவன்முத்து முன்னிலை வகித்தனர்.சிறப்பு பேச்சாளர் யுவராஜ், உயர் கல்விக்கான வழிகாட்டி ஆலோசனை வழங்கினார். அரசு பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாலு, வள்ளி ஜூவல்லரி பாண்டுரங்கன், சண்முகம் ஜூவல்லரி பாலமுருகன், ஆனந்தா ஜூவல்லரி ஜெயராமன், சிவில் இன்ஜினியர் சிவக்குமார் சிறப்புரையாற்றினர்.சங்க செயலாளர் தேவநாதன், ஆலோசகர் பாண்டியன், மன்ற செயலாளர் வீரமணி, பொருளாளர் கந்தசாமி, ஆலோசகர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் உமாபதி மற்றும் நிர்வாகிகள், சங்கத்தினர், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.விழாவில், கடந்த பொது தேர்வில் 80 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பதக்கமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.