உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மளிகை கடையில் குட்கா விற்பனை செய்தவர் கைது

மளிகை கடையில் குட்கா விற்பனை செய்தவர் கைது

மரக்காணம் : மரக்காணம் அடுத்த அனுமந்தை மளிகை கடையில் குட்கா பொருட்களை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். மரக்காணம் அடுத்த அனுமந்தை, முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுகுமாரன் மகன் கிருபாகரன்,32; இவரது மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்கள் பதுக்கி வைத்துள்ளதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று காலை இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் கிருபாகரன் மளிகை கடை மற்றும் வீட்டில் சோதனை செய்தனர். அப்பொழுது மளிகை கடை மற்றும் வீட்டில் மூன்று மூட்டைகளில் 1010 பாக்கெட்டுகள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.கிருபாகரன் மீது போலீசார் வழக்குப் பதிந்த அவரை கைது செய்தனர், குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை