உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மேல்பாக்கம் ஊராட்சி பள்ளியில் பள்ளி கட்டடம் திறப்பு விழா

மேல்பாக்கம் ஊராட்சி பள்ளியில் பள்ளி கட்டடம் திறப்பு விழா

திண்டிவனம்: மேல்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி புதிய கட்டடம் திறப்பு விழா நடந்தது.ஒலக்கூர் ஒன்றியம், மேல்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 27.97 லட்சம் ரூபாய் செலவில், புதியதாக பள்ளி கட்டடம் கட்டப்பட்டது.இக்கட்டடத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மஸ்தான் குத்துவிளக்கேற்றி வைத்தார்.ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், துணைச் சேர்மன் ராஜாராம், ஒலக்கூர் பி.டி.ஓ.,க்கள் சரவணகுமார், நாராயணன், விழுப்புரம் மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் சேகர், திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், மயிலம் ஒன்றிய செயலாளர் மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர் சுபலட்சுமி, பள்ளி தலைமையாசிரியர் சுகந்தி, ஊராட்சி தலைவர் மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை