உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இ.எஸ்., கலை கல்லுாரியில் துாண்டல் திட்ட அறிமுக விழா

இ.எஸ்., கலை கல்லுாரியில் துாண்டல் திட்ட அறிமுக விழா

விழுப்புரம், : விழுப்புரம் இ.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 9வது ஆண்டை யொட்டி, முதலாம் ஆண்டு மாணவர்களக்கான துாண்டல் திட்ட அறிமுக விழா நடந்தது.துணை முதல்வர் வேல்முருகன் தலைமை தாங்கினார். முதல்வர் முரளிதரன், மாணவர்கள் கனவுகளை நினைவாக்க, ஒழுக்கத்தோடு உழைக்க வேண்டும். மாணவர்கள் ஊக்கத்தோடு கல்வி கற்க வேண்டும். வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என கூறினார். இந்த நிகழ்ச்சி, 7 நாட்கள் நடக்கிறது. இதில், துறை சார்ந்த வல்லுனர்கள் சிறப்புரை, கலந்தாய்வு, ஆளுமை பண்புகளின் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, பள்ளி கல்விக்கும், கல்லுாரி கல்விக்கும் இடைப்பட்ட அடிப்படை கல்வியின் தேக்க நிலையை சமன்படுத்தும், பிரிட்ஜ் கோர்ஸ் வகுப்புகள், பிந்தைய சேர்க்கை சோதனை தேர்வுகள், மென்டார் மென்டி கலந்தாய்வு ஆகிய பல நிகழ்வுகள் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை