மேலும் செய்திகள்
தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி
14 hour(s) ago
ஒன்றிய அலுவலக கட்டுமான பணி: சேர்மன் ஆய்வு
14 hour(s) ago
கண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
14 hour(s) ago
விழுப்புரம்: விழுப்புரத்தில் இந்திய கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகே, நகர கிளை சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வழக்கறிஞர் ராஜகுரு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சவுரிராஜன், துணைச் செயலாளர்கள் முருகன், கலியமூர்த்தி கண்டன உரையாற்றினர். நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், ஜெயமலர், ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா கழிவறை வசதி செய்து தர வேண்டும். நகராட்சிக்குட்பட்ட 24, 5, 42 வார்டுகள் மற்றும் அலமேலு நகரில் குடிநீர், தெருமின் விளக்கு, பாதாள சாக்கடை திட்டம், சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago