மேலும் செய்திகள்
தலை மறைவு குற்றவாளி கைது
10 hour(s) ago
வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுக்கூட்டம்
10 hour(s) ago
புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது
10 hour(s) ago
திண்டிவனம் நகராட்சியில் ஆளும் கட்சி கவுன்சிலர்கள் இரு பிரிவாக செயல்படுவதால் கமிஷனராக யார் வந்தாலும் இடமாறுதல் பெற்றுச் சென்று விடுகின்றனர் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.திண்டிவனம் நகர மன்ற தலைவராக இருப்பவர் தி.மு.க.,வைச் சேர்ந்த நிர்மலா ரவிச்சந்திரன். மொத்தமுள்ள 33 கவுன்சிலர்களில் 26 பேர் தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள். பலம் வாய்ந்த நகராட்சியில், ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்குள் பிளவு ஏற்பட்டு 10க்கு மேற்பட்ட கவுன்சிலர்கள் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.அமைச்சர் மஸ்தான் தலையிட்டு பல முறை அதிருப்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், இதுவரை கவுன்சிலர்கள் ஒன்று படாமல் இருந்து வருகின்றனர்.கவுன்சிலர்களுக்குள் ஏற்பட்ட பிளவு காரணமாக நகராட்சி அதிகாரிகள் யார் பேச்சை கேட்பது என்ற சிக்கல் எழுந்துள்ளது. தனி அணியாக செயல்படும் கவுன்சிலர்கள் கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்கு புகார் மனு கொடுத்தும், எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது. இந்த கோஷ்டி பிரச்னையால் திண்டிவனம் நகராட்சிக்கு வரும் கமிஷனர்கள் யாரும் நிரந்தரமாக பணியில் இருக்க விருப்பமில்லாமல் மாறுதல் கேட்டு சென்று விடுகின்றனர். இந்த சூழ்நிலையில், திண்டிவனம் நகராட்சி கமிஷனராக இருந்த தமிழ்ச்செல்வி, கடந்த ஜூன் 12ம் தேதி விருதுநகர் நகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.அதனைத் தொடர்ந்து திருப்பூர் நகராட்சி கமிஷனராக இருந்த சதிஷ்குமார், திண்டிவனம் நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், சதிஷ்குமார் பொறுப்பேற்காமல், ஆளுங்கட்சியினரை பிடித்து, வாணியம்பாடி நகராட்சிக்கு பணி மாறுதல் வாங்கி கொண்டு, திண்டிவனம் நகராட்சியில் கால் வைக்காமலேயே, சிட்டாய் பறந்து விட்டார்.இதன் பிறகு விழுப்புரம் நகராட்சி கமிஷனர் ரமேஷ், திண்டிவனம் நகராட்சிக்கு கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இதற்கிடையே ரமேஷ், மறைமலை நகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதனால் திண்டிவனம் நகராட்சிக்கு மேலாளராக உள்ளவர் பொறுப்பு வகித்து வருகிறார். மேலாளருக்கு செக்கில் கையெழுத்து போடுவதற்கு அதிகாரம் இல்லை.தற்போது விழுப்புரம் நகராட்சிக்கு கொடைக்கானலில் கமிஷனராக இருந்து வந்த சத்தியநாதன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இன்னும் பொறுப்பேற்காமல் உள்ளார். இவர் பொறுப்பேற்றதும், திண்டிவனம் நகராட்சி கமிஷனராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என கூறப்படுகிறது. மற்ற நகராட்சிகளுக்கெல்லாம் தனியாக கமிஷனர் நியமிக்கப்படும் சூழ்நிலையில், திண்டிவனம் நகராட்சிக்கு கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்படுபவர்கள் பொறுப்கேற்காமல், வேறு ஊருக்கு சென்று விடுகின்றனர்.தற்போதுள்ள சூழ்நிலையில், திண்டிவனம் நகராட்சிக்கு புதிதாக கமிஷனர் யாரும் நியமிக்கப்படாமல் காலியாக உள்ளது. ஆளுங்கட்சி தரப்பு, நகராட்சி நிர்வாக அதிகாரிகள் தரப்பை அணுகி கேட்டால், திண்டிவனம் நகராட்சி பெயரை கேட்டாலே பலர் கமிஷனராக பொறுப்பேற்க தயக்கம் காட்டுகின்றனர். திண்டிவனம் நகராட்சியில் கவுன்சிலர்களுக்குள் ஏற்பட்டுள்ள கோஷ்டியில் தங்கள் தலை உருளாமல் இருக்க பதமாக கழன்று கொள்வதாக தெரிவிக்கின்றனர்.-நமது நிருபர்-
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago