உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரத்தில் 25 புதிய அரசு பஸ்கள் அமைச்சர்கள் தொடங்கி வைப்பு

விழுப்புரத்தில் 25 புதிய அரசு பஸ்கள் அமைச்சர்கள் தொடங்கி வைப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், புதியதாக வாங்கப்பட்ட 25 புதிய பஸ்கள் இயக்குவதற்கான துவக்க விழா நேற்று நடந்தது.விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த விழாவிற்கு, அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் குணசேகரன் வரவேற்றார். கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் முன்னிலை வகித்தனர்.விழாவில், அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் ஆகியோர் 9.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட, மகளிர் இலவச பயணத்துக்கான 12 புதிய டவுன் பஸ்கள் மற்றும் 13 புறநகர் பஸ்களையும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, கொடியசைத்து துவக்கி வைத்தனர்.விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, முன்னாள் சேர்மன் ஜனகராஜ், அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் சதிஷ்குமார், இணை இயக்குனர் செல்வாம்பாள், போக்குவரத்து தொழிற் சங்கத்தினர், பொது மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை