| ADDED : ஜூன் 27, 2024 02:59 AM
மரக்காணம்: மரக்காணம் அடுத்த பிரம்மதேசத்தை சேர்ந்த ராஜேந்திரபிரபு மனைவி சித்ரா,39; இவர் நேற்று முன்தினம் மதியம்12.00 மணிக்கு இந்தியன் வங்கியிலுள்ள ஏ.டி.எம்., மிற்கு சென்றுள்ளார். அப்பொழுது அங்கிருந்த நபர் பணம் எடுத்து தருவதாக கூறி ஏ.டி.எம்.,கார்டை வாங்கி பின் நெம்பரை கேட்டுள்ளார்.சித்ராவும் பின் நெம்பரை அவரிடம் கூறியுள்ளார். அதன் பின் அந்த நபர் பணம் இல்லை என கூறி வேறு ஒரு ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்துவிட்டு சென்றுள்ளார். அதன் பின் சிறிது நேரம் கழித்தபின் சித்ரா வங்கி கணக்கில் இருந்து 6,400 ரூபாய் எடுத்ததாக அவரது மொபைல் போனிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இது குறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.