உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொன்முடி மீதான குவாரி வழக்கு: இதுவரை 20 சாட்சிகள் பல்டி

பொன்முடி மீதான குவாரி வழக்கு: இதுவரை 20 சாட்சிகள் பல்டி

விழுப்புரம் : அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், மேலும் ஒரு அரசு தரப்பு சாட்சி பிறழ் சாட்சியாக மாறியது.விழுப்புரம் மாவட்டம், பூத்துறை கிராமத்தில் உள்ள அரசு செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக, அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டு, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வரும் இவ்வழக்கின் 67 அரசு தரப்பு சாட்சிகளில் நேற்று முன்தினம்வரை 23 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். தொடர்ந்து, நேற்று நடந்த விசாரணையில் அரசு தரப்பின் 24-வது சாட்சியாக, ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ., ராமசாமி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.அப்போது அவர், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் வற்புறுத்தியதன்பேரில், வழக்கு குறித்த கோப்புகளில் கையெழுத்திட்டேன், தனக்கு எதுவும் தெரியாது என பிறழ் சாட்சியம் அளித்தார். அதனை பதிவு செய்த நீதிபதி பூர்ணிமா, வழக்கு விசாரணையை வரும் ஏப்.22ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.இவ்வழக்கில் இதுவரை விசாரிக்கப்பட்ட 24 சாட்சிகளில் 20 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை