உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விளையாட்டில் சாதனை படைக்கும் கிராமப்புற அரசு பள்ளி மாணவிகள்

விளையாட்டில் சாதனை படைக்கும் கிராமப்புற அரசு பள்ளி மாணவிகள்

விக்கிரவாண்டி: கோலியனுார் அருகே கிராமபுற அரசு பள்ளி மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்து வருகின்றனர்.கோலியனுார் அடுத்த எடப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிபவர் ஹரிதாஸ். இவரது பயிற்சியின் காரணமாக இப்பள்ளி மாணவிகள் மற்றும் மாணவர்கள் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் மூலம் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி அளவில் சாதனை படைத்து வருகின்றனர்.குறிப்பாக பெண்களுக்கான கபடி போட்டியில் இப் பள்ளி மாணவிகள் மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் சாதனை படைத்துள்ளனர்.இந்த சாதனை மூலம் இப்பள்ளி மாணவ, மாணவிகள் விளையாட்டு இட ஒதுக்கீட்டில் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் இட ஒதுக்கீடு பெற்று பயின்று வருகின்றனர்.மேலும், மாநில அளவிலான சாலையோர மிதிவண்டி போட்டியில் மாணவி பிரியதர்ஷினி இரண்டு ஆண்டுகளாக பங்கேற்று வருகிறார். மாணவர் புருஷோத்தமன்கடந்த ஆண்டு சென்னை மேல கோட்டையூரில் தமிழ்நாடு உடற்கல்வியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடந்த மாநில அளவிலான3000 மீட்டர் ஓட்ட தடகளப் போட்டியில்பங்கேற்றார்.மாணவர்கள் சந்தோஷ், தேஜேஸ்வரன், புகழ், கவியரசன், ஜெயக்குமார், பூவரசன் ஆகியோர் காஞ்சிபுரம், சென்னையில் நடந்தமாநில அளவிலான நீச்சல் போட்டியில் கடந்தஇரண்டு ஆண்டுகளாகபங்கேற்று வருகின்றனர்.கடந்தாண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கபடி போட்டியில் பங்கேற்றனர். பள்ளியின் முன்னாள் மாணவிகள், இந்திய பள்ளி விளையாட்டுக் குழுமம் எனப்படும் தேசிய அளவில் பள்ளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 14 வயதுக்குட்பட்ட தமிழக அணியில்காவியா, இலக்கியா, திரிஷா ஆகியோர் சட்டீஸ்கர் மாநிலத்தில் நடந்த போட்டியில் வென்று சாதித்துள்ளனர்.இப்பள்ளி மாணவர்கள் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்க தலைமை ஆசிரியை லட்சுமி, கல்வி மேலாண்மைக் குழு, கிராம முக்கியஸ்தர்கள் உதவிகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை