உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிருஷ்ணாபுரம் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா

கிருஷ்ணாபுரம் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா

செஞ்சி : செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. செஞ்சி கிருஷ்ணாபும் மாரியம்மன், செஞ்சி கோட்டை பூவத்தம்மன், செல்லியம்மன் கோவில் சாகை வார்த்தல் திருவிழா கடந்த 10ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் விசேஷ அபிஷேக அலங்காரம் செய்து வந்தனர். 17ம் தேதி மாலை பூவத்தம்மன், செல்லியம்மன் கோவிலில் ஊரணி பொங்கலும், அன்று இரவு மாரியம்மன், பூவத்தம்மன், செல்லியம்மன் பூங்கரக ஊர்வலமும் நடந்தது. 18ம் தேதி பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு மாரியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் வழிபாடு, அன்று இரவு கும்ப படையல் நடந்தது. நேற்று பூங்கரகம் மற்றும் அம்மன் வீதி உலாவும், மாலை 5:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம், காப்பு களைதலும் நடந்தது. விழா ஏற்பாடுகளை நிர்வாக குழுவினர் மற்றும் கிருஷ்ணாபுரம் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை