உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இரும்பை கோவிலில் 5ம் ஆண்டு பிரமோற்சவ விழா

இரும்பை கோவிலில் 5ம் ஆண்டு பிரமோற்சவ விழா

வானுார்: இரும்பை மாகாளேஸ்வரர் கோவிலில் ஐந்தாம் ஆண்டு பிரமோற்சவ விழா துவங்கியது.புதுச்சேரி-திண்டிவனம் பைபாஸ் சாலையில், இரும்பை சந்திப்பில் பிரசித்தி பெற்ற மாகாளேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ஐந்தாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, அன்றைய தினம் இரவு 7;00 மணிக்கு ஆதிகாரநந்தி சேவையும், பஞ்சமூர்த்தி புறப்பாடும் நடந்தது.பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, தினந்தோறும் இரவு 7;00 மணிக்கு பூத வாகனம், சிம்மவாகனம், பாரிவேட்டை, ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 20ம் தேதி காலை 9;00 மணிக்கு பிரதோஷ அபிேஷக பூஜையும், இரவு 7;00 மணிக்கு புன்னை மரஅலங்காரத்தில் சந்திரசேகர் புறப்பாடும் நடக்கிறது. 22ம் தேதி காலை 9;00 மணிக்கு திருத்தேர் வீதியுலாவும், 23ம் தேதி காலை 7;30 மணிக்கு நடராஜர் தேரடி உற்சவமும் நடக்கிறது. வரும் 24ம் தேதி இரவு 7;00 மணிக்கு தெப்பல் உற்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் உமாமகேஸ்வரி, செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் கோவில் அர்ச்சகர்கள், கிராம மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை