உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இன்ஸ்பெக்டரை தாக்க முயன்ற இருவர் குண்டாசில் கைது

இன்ஸ்பெக்டரை தாக்க முயன்ற இருவர் குண்டாசில் கைது

விழுப்புரம் : இன்ஸ்பெக்டரை தாக்கய முயன்ற இருவர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.ஆரோவில் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசாா் கடந்த ஜூலை 3ம் தேதி பூத்துறை மேட்டுப்பாளையம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வந்த வானுார், எம்.ஜி.ஆர்., நகர் நடராஜன் மகன் உதயா (எ) உதயராஜ், புதுச்சேரி, கருவடிக்குப்பம் மலையாளத்தான் மகன் பாபா கார்த்திக் (எ)கார்த்திகேயன்,31; ஆகியோரை நிறுத்தி விசாரித்தனர்.அதில் ஆத்திரமடைந்த இருவரும், இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்து, தாக்க முயன்றனர். உடன் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்கு பதிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது, ஆரோவில் போலீஸ் ஸ்டேஷனில் கொலை மிரட்டல், உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்களின் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., தீபக்சிவாச் பரிந்துரையை ஏற்று, இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் பழனி உத்தரவிட்டார்.இந்த உத்தரவு நகலை, கடலுார் மத்திய சிறையில் உள்ள உதயா மற்றும் பாபா கார்த்திக் ஆகியோரிடம் ஆரோவில் போலீசார் நேற்று வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ