உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பார்வையாளர் நேரில் ஆய்வு

தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பார்வையாளர் நேரில் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரத்தில் இடைத்தேர்தல் கண்காணிப்பு பணிகளை தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் 10ம் தேதி நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளும், கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு மையத்தை தேர்தல் காவல் பார்வையாளர் அஜய்குமார் பாண்டே நேற்று காலை பார்வையிட்டார்.அப்போது, தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவல்கள், புகார்கள், வீடியோ பதிவுகள் குறித்தும், அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் பழனி, எஸ்.பி., தீபக்சிவாச் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை