உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மனைவி தாக்கு: கணவர் கைது

மனைவி தாக்கு: கணவர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே குடும்பத் தகராறில் மனைவியைத் தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் அடுத்த மொளசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 36; ரோடு ரோலர் டிரைவர். இவரது மனைவி கன்னிகா, 34; திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. 3 பிள்ளைகள் உள்ளனர். குடிப்பழக்கம் உடைய மணிகண்டன் தினமும் குடித்து விட்டு குடும்ப செலவிற்கு பணம் தராமல் இருந்ததால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.கடந்த 21ம் தேதி, கன்னிகா, காணை அருகே உள்ள சிறுவாக்கூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அங்கு வந்த மணிகண்டனுக்கும், கன்னிகாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மணிகண்டன், கன்னிகாவை திட்டி, தாக்கினார்.இது குறித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ