மேலும் செய்திகள்
புதுச்சேரி சாராயம் விற்ற 3 பேர் கைது
18 hour(s) ago
நாளை மின்தடை
18 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
18 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
18 hour(s) ago
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 28 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, ஜூலை மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நேற்று காலை 10:00 மணிக்கு துவங்கியது. வேலை வாய்ப்பு மைய உதவி இயக்குனர் பாலமுருகன் தொடங்கி வைத்தார். முகாமில், 31 தனியார் துறை நிறுவன பிரதிநிதிகள் நேர்முக தேர்வு நடத்தினர்.விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.டி.ஐ., டிகிரி, டிப்ளமோ, இன்ஜினியரிங், நர்சிங் உள்ளிட்ட தகுதியுடைய வேலைதேடுவோர் 178 பேர், உரிய சான்றிதழ்களுடன் முகாமில் பங்கேற்றனர். நிறைவாக, 28 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. மேலும், 17 பேர் இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago