உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த தோகைப்பாடி கிராமத்தில் காணை சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர்.அப்போது, அப்பகுதியில் நாராயணசாமி, 58; என்பவரது பெட்டி கடையில் குட்கா விற்றது தெரிந்தது. உடன், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

மற்றொரு வழக்கு

குமளம் பகுதியில் வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர். அப்போது, குமளத்தைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி மனைவி அனிதா, 37; என்பவரது பங்க் கடையில், குட்கா விற்றது தெரிந்தது. இதனையடுத்து, அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை