உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது

விழுப்புரம் : விழுப்புரம் மற்றும் காணை பகுதியில் குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.காணை சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார், நேற்று பள்ளியந்துார் கிராமத்தில் ரோந்து சென்றனர். அங்கு, குட்கா பொருட்கள் விற்ற அதே கிராமத்தைச் சேர்ந்த சம்பத் மனைவி அமிர்தம், 45; என்பவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.

மேலும் ஒரு வழக்கு

விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் செஞ்சி பைபாஸ் சாலையருகே ரோந்து சென்றனர். அங்கு, குட்கா பொருட்கள் விற்ற மாம்பழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் சத்யராஜ், 28; என்பவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை