உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 2 பேர் கைது

 கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 2 பேர் கைது

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பெரியதச்சூர் சப் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் நேற்று சுடுகாடு பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு, கஞ்சா பொட்டலங்களுடன் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், விழுப்புரம் பூந்தோட்டம் தமிழ்ச்செல்வன், 20; ஆர்.சி.மேலகொந்தையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் எனவும் தெரியவந்தது. உடன் இருவரையும் கைது செய்து 500 கிராம் கஞ்சா மற்றும் 8,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை