உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பட்டப்பகலில் மூதாட்டியிடம் 2 சவரன் செயின் பறிப்பு

பட்டப்பகலில் மூதாட்டியிடம் 2 சவரன் செயின் பறிப்பு

வானுார்: பட்டப்பகலில் மூதாட்டியிடம் 2 சவரன் செயின் பறித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். வானுார் அடுத்த இரும்பை ரோடு அச்சரம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட அண்ணாமலை கார்டன் பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி மனைவி கஸ்துாரி, 70; இவர், மகன் சிவமணியின் பராமரிப்பில் வசித்து வருகிறார். நேற்று காலை 11:30 மணிக்கு இரும்பை கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். இரும்பை ரோடு, அண்ணாமலை கார்டன் சந்திப்பில் வந்த போது, அங்கு பைக்கில் நின்றிருந்த மர்ம ஆசாமிகள் இருவர், மூதாட்டியின் கழுத்தில் இருந்த 2 சவரன் செயினை பறித்தனர். இதனால் திடுக்கிட்ட அவர் கூச்சலிட்டார். அதற்குள் அந்த ஆசாமிகள், வேகமாக திண்டிவனம் மார்க்கத்தில் சென்று விட்டனர். கஸ்துாரி கொடுத்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை