உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காஸ் கசிவால் தீ; 4 பேர் காயம்

காஸ் கசிவால் தீ; 4 பேர் காயம்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த சிந்தாமணியைச் சேர்ந்தவர் லலிதா, 55; இவரது மகன் ஆதவன், 35; இவரது வீட்டில் நேற்று மதியம் 1:00 மணியளவில் திடீரென காஸ் கசிந்து வெளியேறியுள்ளது. இதனையறியாமல் ஆதவன் மின் விளக்கு சுவிட்சை ஆன் செய்த போது, தீ பிடித்தது. இதில் லலிதாவும், ஆதவனும் சிக்கி அலறினர்.உடன், வீட்டின் முன்புறத்தில் கடை வைத்திருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பொற்செல்வி, 35; வடகுச்சிபாளையம் ஆம்புலன்ஸ் டிரைவர் தினேஷ், 20; ஆகிய இருவரும் உள்ளே தீயில் சிக்கியவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில், அவர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. விழுப்புரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.தீக்காயம் அடைந்த 4 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை