உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ

விழுப்புரம் : வளவனுார் அடுத்த பரசுரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் சஞ்சய்,21; இவர், சென்னையில் தனியார் கார் கம்பெனியில் வேலை செய்தார். அப்போது, அதே பகுதியில் பியூட்டிஷியன் கோர்ஸ் படித்து வந்த செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்தனர்.அதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 11ம் தேதி, சிறுமியை ஊருக்கு அழைத்து வந்த சஞ்சய், கோவிலில் வைத்து திருமணம் செய்து, குடும்பம் நடத்தி வந்தார். அதில் கர்ப்பமான சிறுமிக்கு, கடந்த 18ம் தேதி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, சஞ்சய் மீது போக்சோ சட்டத்திலும், அவரது பெற்றோர் முருகன், மீனா ஆகியோர் மீது, குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்