உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க., பிரமுகர்கள்மூவர் மீது வழக்குப்பதிவு

அ.தி.மு.க., பிரமுகர்கள்மூவர் மீது வழக்குப்பதிவு

கடலூர்:முன்விரோத தகராறில் தி.மு.க., பிரமுகரைத் தாக்கிய அ.தி.மு.க., பிரமுகர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர்.ரெட்டிச்சாவடி அடுத்த உள்ளேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். தி.மு.க., பிரமுகர்.இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர்கள் செல்வக்குமார், ஆதியப்பன், கவியரசன் ஆகியோருக்கும் முன்விரோதம் உள்ளது.இந்நிலையில் கடந்த 5ம் தேதி தனது வீட்டின் அருகே நடந்து சென்ற வெங்கடேசனை செல்வக்குமார் உள்ளிட்ட மூவரும் வழிமறித்துத் தாக்கினர்.இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து செல்வக்குமார், ஆதியப்பன், கவியரசன் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை