உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டி

 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டி

விழுப்புரம்: விழுப்புரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவில் ஓவியப் போட்டி நடந்தது. உலக மாற்றுத் திறனாளிகள் தினம் வரும் டிசம்பர் 3ம் தேதி வருகிறது. அதனையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக் கு, மாவட்ட அளவிலான ஓவிய போட்டிகள், மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் நடத்தப்பட்டது. விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளி யில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ராஜசேகர் தலைமை தாங்கினார். நடுவர்களாக, ஓவிய ஆசிரியர்கள் வேல்குமரன், ஜெயக்குமார், அண்ணாமலை, உமா, பழனியம்மாள் பங்கேற்ற னர். மாற்றுத்திறனாளிகள் துறை உதவியாளர் முருகன் முன்னிலை வகித்தார். போட்டியில், 10 வயதுக்குட்பட்டோர், 11 முதல் 18 வயதுக்குட்பட்டோர், 18 வயதுக்கு மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள் எ ன, 3 பிரிவுகளாக போட்டிகள் நடந்தது. 150 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று அவர்கள் விரும்பும் தலைப்பு களில் ஓவியம் வரைந்து தனி திறனை வெளிப்படுத்தினர். இதில், முதல் பரிசாக 1000 ரூபாய், 2வது பரிசாக 500 ரூபாய், 3ம் பரிசாக 250 ரூபாய் வழங்கப்படுகிறது. போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. பரிசு மற்றும் சான்றிதழ், விழுப்புரத்தில் வரும் டிசம்பர் 3ம் தேதி நடக்க உள்ள விழாவில் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை