உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாவட்டத்தில் காவல் துறை வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு

மாவட்டத்தில் காவல் துறை வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது.விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.பி., தீபக் சிவாச் உத்தரவின் பேரில், வாராந்திர சிறப்பு மனு விசாரணை கூட்டம் நேற்று நடந்தது. விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஏ.டி.எஸ்.பி., ஸ்ரீதரன் தலைமை தாங்கி, பொதுமக்களின் மனுவை பெற்று விசாரணை செய்தார். அதே போல், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம் ஆகிய உட்கோட்டங்களில் டி.எஸ்.பி., மேற்பார்வையில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடந்தது. இதில், 184 புகார் மனுக்கள் பெறப்பட்டது. அதில் 135 மனுக்கள் மீது உடனடி விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது. 49 மனுக்கள் மீது உரிய விசாரணை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. திண்டிவனம் போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.பி., தீபக்சிவாச், ஆய்வு செய்த போது, பொதுமக்களின் மனுக்களை பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை