உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரத்தில் தி.மு.க., ரத்த தானம்

 உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரத்தில் தி.மு.க., ரத்த தானம்

விழுப்புரம்: உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் ரத்த தான முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. விழுப்புரம் தி.மு.க., மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை; தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் ரத்த தான முகாம் இன்று (26ம் தேதி), விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடக்கிறது. 490 பேர் ரத்த தானம் வழங்குகின்றனர். தொடர்ந்து வள்ளலார் மாளிகை, முதியோர் இல்லத்தில் 49 நாட்களுக்கு தொடர் அன்னதானம், விழுப்புரம் மற்றும் வானுார் சட்டசபை தொகுதிகளில் 750 நபர்கள் பங்கேற்கும் கிரிக்கெட், பேட்மிட்டன், வாலிபால் போட்டிகள், 235 வார்டுகள், ஊராட்சிகளில் கொடியேற்றி இனிப்பு வழங்கும் விழா நடக்கிறது. நகராட்சி, ஒன்றியம், பேரூராட்சியில் 57 தெருமுனை பிரசார கூட்டங்கள், விழுப்புரம் மற்றும் வானுார் தொகுதியில் பொதுக்கூட்டம் மற்றும் 235 வார்டுகள், ஊராட்சிகளில் 1,48,000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வரும் டிச., 31ம் தேதி வரை நடக்கிறது.ரத்த தான முகாம் மற்றும் அதனை தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகளில் மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை