உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  தி.மு.க., செயற்குழு நிர்வாகிகள் ஆலோசனை

 தி.மு.க., செயற்குழு நிர்வாகிகள் ஆலோசனை

விழுப்புரம்: விழுப்புரத்தில், தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமை தாங்கினார். எஸ்.ஐ.ஆர்., (வாக்காளர் பட்டியல் சிறப்பு சீராய்வு ஆய்வு) பணிகள் குறித்து, மாநில துணை பொதுச் செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ., ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், துணைச் செயலாளர்கள் முருகன், கற்பகம், தொகுதி பார்வையாளர் கார்த்திகேயன், தலைமை கழக வழக்கறிஞர் சுரேஷ், மாநில மகளிர் பிரசாரக்குழு செயலாளர் தேன்மொழி, செயற்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், அப்துல்சலாம் உட்பட பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள், தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை