உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மழையால் வீடு சேதம் தி.மு.க., நிவாரணம்

 மழையால் வீடு சேதம் தி.மு.க., நிவாரணம்

விழுப்புரம்: ஆவிக்கொளப்பாக்கம் ஊராட்சியில் மழையால் வீடு சேதமானதைத் தொடர்ந்து, வீட்டின் உரிமையாளருக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. திருக்கோவிலுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஆவிக்கொளப்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது குடிசை வீடு கனமழையால் இடிந்து விழுந்தது. இதனையறிந்த தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் கவுதசி காமணி நேரில் பார்வையிட்டு, பாதித்த நபருக்கு நிதியுதவி மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் முருகன், திருக்கோவிலுார் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கம், மத்திய ஒன்றிய செயலாளர் தீனதயாளன், நகர செயலாளர் கோபிகிருஷ்ணன், நகர அவைத் தலைவர் குணா, ஒன்றிய துணைச் செயலாளர் ஏழுமலை, கிளைச் செயலாளர் சுப்ரமணி, வழக்கறிஞர் நிஜாம், விவசாய அணி அமைப்பாளர் வெங்கடாசலம் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி