உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / எல்லீஸ் அணைக்கட்டில் மழைநீர் தேக்கம் விவசாயிகள் மகிழ்ச்சி

எல்லீஸ் அணைக்கட்டில் மழைநீர் தேக்கம் விவசாயிகள் மகிழ்ச்சி

விழுப்புரம்: விழுப்புரம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள எல்லீஸ் அணைக்கட்டு பகுதியில், முதன் முதலாக மழை நீர் தேங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில், கப்பூர் - ஏனாதிமங்கலம் இடையே கட்டப்பட்ட எல்லீஸ் அணைக்கட்டு, 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் உடைந்து சேதமானது.இதனையடுத்து, பொதுப்பணித்துறை சார்பில் 86 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அணைக்கட்டு கட்டப்பட்டது.கடந்த மாதம், அணைக்கட்டு கட்டுமான பணிகள் முடிந்தது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, தென் பெண்ணை ஆற்றில் மழை நீர் வழிந்தோடி வருகிறது.இந்த மழை நீர் தற்போது, புதிதாக கட்டப்பட்டுள்ள எல்லீஸ் அணைக்கட்டு பகுதியில் 5 அடி உயரத்திற்கு தேங்கியுள்ளது. மழைநீர் வீணாக வெளியேறாமல், தேங்கி நிற்பதால், ஏனாதிமங்கலம், கப்பூர், மரகதபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை