உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காய்கறி பதப்படுத்தும் மையம் திறப்பு விழா

காய்கறி பதப்படுத்தும் மையம் திறப்பு விழா

திண்டிவனம்: திண்டிவனம் அருகே பல்நோக்கு மற்றும் காய்கறி முதன்மை பதப்படுத்தும் மையம் திறப்பு விழா நடந்தது.திண்டிவனம் அருகே விழுப்புரம் விற்பனைக்குழு துறையின் மூலம் ஓங்கூர் கிராமத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், ரூ.407.10 லட்சம் செலவில், பல்நோக்கு மற்றும் காய்கறி முதன்மை பதப்படுத்தும் மையம் கட்டப்பட்டுள்ளது.இம்மையத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையொட்டி ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம் குத்துவிளக்கேற்றி, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். வேளாண்மை துணை இயக்குநர் சத்தியமூர்த்தி, ஒலக்கூர் பி.டி.ஓ.,க்கள் நாராயணன், சரவணக்குமார், ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கிருஷ்ணன், பஞ்சாயத்து தலைவர் கண்ணன், துணை தலைவர் குமார், வி.ஏ.ஒ., மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வேளாண் அலுவலர் கருப்பையா, உதவி வேளாண் அலுவலர் சீதா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை