உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  சாலையோரம் நின்றவர் வேன் மோதி பலி

 சாலையோரம் நின்றவர் வேன் மோதி பலி

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மருத்துவமனையில் சிகிச்சைபெறும் தாய்க்கு டிபன் வாங்க வந்தவர், சாலையோரம் நின்றிருந்த போது வேன் மோதி இறந்தார். செஞ்சி, சக்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயன், 45; இவர் நேற்று காலை 8:40 மணியளவில் முண்டியம்பாக்கம், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தனது தாயை பார்த்துவிட்டு உறவினர்களுக்கு டிபன் வாங்க வந்தார். கல்லுாரி அருகே சர்வீஸ் சாலையோரம் உள்ள டிபன் கடையில் ஆர்டர் கொடுத்துவிட்டு வெளியே மழைநீர் வடிகால் வாய்க்கால் மீது நின்றிருந்தார். அப்போது திண்டிவனம் பகுதியில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற மகேந்திரா வேன் திடீரன கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தி இருந்த பைக்குகள் மீது மோதி வாய்க்கால் மீது ஏறி அங்கு நின்றிருந்த விஜயன் மீது மோதியது. இந்த விபத்தில் விஜயன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை