மேலாண்மைச் சான்று வழங்கல்
விழுப்புரம்: அனைத்து பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களுக்கான மாநாடு கலெக்டர் பழனி தலைமையில் நடந்தது. மாநாட்டில் விக்கிரவாண்டி வட்டாரத்தில் சிறந்த பள்ளி மேலாண்மை குழுவாக தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டது. அதற்கான சான்றிதழை கலெக்டர், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் காஞ்சனா, தலைமை ஆசிரியர் செல்லையா ஆகியோரிடம் வழங்கினார். சி.இ.ஓ., அறிவழகன், டி.இ.ஓ.,க்கள் கவுசர் ,மகாலட்சுமி, ஒருங்கிணைந்த கல்வி உதவித் திட்ட அலுவலர் தனவேல் உடனிருந்தனர். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
செஞ்சி: ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு செஞ்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, கல்லுாரி செயலாளர் ஸ்ரீபதி தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகவேல் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். சான்றிதழ் வழங்கல்
விழுப்புரம்: அரசு மருத்துவக் கல்லுாரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடந்த விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் ரமா தேவி தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவி துரை முன்னிலை வகித்தனர். விரிவாக்க அலுவலர் பூங்கோதை வரவேற்றார். புகழேந்தி எம்.எல்.ஏ., புதுமை பெண் திட்டத்தில் பயனடையும் கல்லுாரி மாணவிகள் 25 பேருக்கு முதல்வர் கையொப்பமிட்ட பாராட்டு சான்றிதழை வழங்கி பாராட்டி பேசினார். துணை முதல்வர் சங்கீதா, ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், பி.டி.ஓ., சுமதி, ஒன்றிய செயலாளர் ஜெயபால் உட்பட பலர் பங்கேற்றனர். முப்பெரும் விழா
மயிலம்: ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லுாரி நாட்டு நல பணி திட்டம் சார்பில் புதுமைப்பெண் திட்டத்தில் சான்றிதழ் வழங்குதல், பாராட்டு மற்றும் பரிசளிப்பு என முப்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு மயிலம் ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி தலைமை தாங்கினார். கல்லுாரி செயலாளர் ராஜ்குமார் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். மயிலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் மணிமாறன், என்.எஸ்.எஸ்., அலுவலர் சிவசுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர். தேர் திருவிழா
கண்டாச்சிபுரம்: ராமநாதீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை மூல்வர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து 10:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகர், சந்திரசேகர சுவாமிகள் தேரில் எழுந்தருளச் செய்து, ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். பெண் குழந்தைகள் தின விழா
மயிலம்: பெரமண்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த தேசிய பெண் குழந்தைகள் தின விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மரியசெல்வி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் பத்மாவதி, முருகன், விஜயகுமார், லோகநாராயணன் முன்னிலை வகித்தனர். அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி வரவேற்றார். விழாவில், பெண் குழந்தை பாதுகாப்பு, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சான்றிதழ் வழங்கும் விழா
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் அரசின் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் நிதி உதவிக்கான சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. கல்லுாரி தாளாளர் யாரப்பேக் தலைமை தாங்கினார். பேராசிரியர் ஏழுமலை வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார். துணைச் சேர்மன் விஜயலட்சுமி, மாவட்ட கவுன்சிலர்கள் செல்வி, சாந்தி, ஒன்றிய கவுன்சிலர் ஷாகின் அர்ஷத், ஊராட்சி தலைவர் செல்வம் வாழ்த்திப் பேசினர். ஊர் முக்கியஸ்தர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர்பங்கேற்றனர். கோவில் கும்பாபிேஷகம்
கண்டாச்சிபுரம்: வீரங்கிபும் காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு விக்னேஸ்ர பூஜையும், கோ பூஜையும் நடந்தது. தொடர்ந்து, மகாபூர்ணா ஹூதி வேதபாராயணமும் நடந்தது. பின் கடம் புறப்பாடாகி காலை 10:00 மணிக்கு காமாட்சி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கண்டாச்சிபுரம், வீரங்கிபுரம், புதுப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது. விளையாட்டு விழா
திண்டிவனம்: பெலாக்குப்பம் ராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விளையாட்டு விழாவிற்கு, பள்ளி நிறுவனர் ரகுராம அடிகளார் தலைமை தாங்கினார். சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம் போட்டியை துவக்கி வைத்தார். விழாவில், பள்ளி தாளாளர் பத்மாவதி, நிர்வாகி பாலசுப்ரமணியன், முதல்வர்கள் கலைவாணி, நாராயணன், உடற்கல்வி ஆசிரியர் விஜயகுமார், மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. புதுமைப்பெண் சான்றிதழ் வழங்கல்
செஞ்சி: செஞ்சி அரசு கலைக் கல்லுாரியில் புதுமைப்பெண் திட்டத்தில் பயன் பெறும் மாணவிகளுக்கு தமிழக முதல்வரின் வாழ்த்து மடல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் லலிதா தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார், 209 மாணவிகளுக்கு வாழ்த்து மடலை வழங்கிப் பேசினார். நிகழ்ச்சியில், பேராசிரியர்கள் சந்திரசேகரன், தாமோதரன், மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை உட்பட பலர் பங்கேற்றனர். விழிப்புணர்வு ஊர்வலம்
விழுப்புரம்: தேசிய வாக்காளர் தினத்தையொட்டி விழுப்புரத்தில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை, கலெக்டர் பழனி தலைமை தாங்கி, கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலத்தில், மாற்றுத் திறனாளிகள், கல்லுாரி மாணவ, மாணவிகள், ஓட்டு போடுவது ஜனநாயக கடமை, ஓட்டளிப்பதன் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அரிதாஸ், ஆர்.டி.ஓ., காஜா ஷாகுல் அமீது, நகராட்சி கமிஷனர் ரமேஷ், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு, தாசில்தார் கிருஷ்ணதாஸ் பங்கேற்றனர்.