உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குழந்தைகளுடன் தாய் மாயம்

குழந்தைகளுடன் தாய் மாயம்

விழுப்புரம் : விழுப்புரம் அருகே குழந்தைகளுடன் காணாமல் போன பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், அப்புபட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரவி, 30; இவரது மனைவி பாத்திமா, 27; இவர்களுக்கு மனஷ்வினி, 3; ரித்தீஷ், 1; என்ற குழந்தைகள் உள்ளனர். கடந்த 16ம் தேதி, விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த சென்னகுணம் கிராமத்தில் உள்ள அம்மா வீட்டிற்கு பார்த்திமா வந்துள்ளார்.அங்கிருந்து, தனது 2 குழந்தைகளுடன் வெளியே சென்று வருவதாக கூறிச்சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை