உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  ஐயப்ப பக்தர்களை ஏற்றிய வெளிமாநில வேன் சிறை பிடிப்பு

 ஐயப்ப பக்தர்களை ஏற்றிய வெளிமாநில வேன் சிறை பிடிப்பு

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே சபரிமலைக்கு பக்தர்களை ஏற்றிச் செல்ல முயன்ற வெளி மாநில சுற்றுலா வேனை, வேன் ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் சிறை பிடித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்ததால் பரபரப்பு நிலவியது. கிளியனுார் பகுதியில் புதுச்சேரி மாநில சுற்றுலா வேன், சபரிமலைக்கு செல்லும் 19 பக்தர்களை ஏற்றிச் சென்றது. இந்த வேன், நேற்று மாலை 3:20 மணிக்கு விக்கிரவாண்டி அடுத்த பெரியதச்சூர் கிராமத்தில் 5 ஐயப்ப பக்தர்களை ஏற்றி கொண்டு சென்ற போது, இங்குள்ள ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த வேன் ஓட்டுநர்கள் சிலருக்கு தகவல் தெரிந்து, விக்கிரவாண்டி டோல்கேட்டில் புதுச்சேரி மாநில சுற்றுலா வேனை மடக்கி பிடித்தனர். தமிழகத்தில், வெளிமாநிலமான புதுச்சேரி பதிவெண் கொண்ட சுற்றுலா வேனில் சபரிமலைக்கு பக்தர்களை ஏற்ற கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, பக்தர்களோடு வேனை, விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, விதிமுறை மீறி சென்ற வெளிமாநில சுற்றுலா வேனுக்கு விழுப்புரம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், 57 ஆயிரம் ரூபாய் வரி மற்றும் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை