உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் அருகே மலட்டாற்றில் பண்ருட்டி பெண் எரித்து கொலை

விழுப்புரம் அருகே மலட்டாற்றில் பண்ருட்டி பெண் எரித்து கொலை

விழுப்புரம் : விழுப்புரம் அருகே ஆற்றில் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த காவணிப்பாக்கம் மலட்டாறில் நேற்று மாலை 5:00 மணிக்கு எரிந்த நிலையில் பெண் உடல் கிடந்தது.தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், இறந்தவர் கடலுார் மாவட்டம், புதுப்பேட்டை அடுத்த கரும்பூரை சேர்ந்த குப்புசாமி மனைவி வசந்தி,31; திருமணமாகி 15 ஆண்டாகும் இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். குப்புசாமி மதகடிப்பட்டில் உள்ள ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். வசந்தி, விழுப்புரத்தில் உள்ள ஒரு துணிக்கடை உரிமையாளர் வீட்டில் வேலை செய்து வந்துள்ளார்.கடந்த 4ம் தேதி காலை வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு வந்த வசந்தி வீடு திரும்பவில்லை. அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து கடந்த 5ம் தேதி குப்புசாமி அளித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து வசந்தியை தேடி வந்த நிலையில், நேற்று கொலை செய்து எரிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, வசந்தி எதற்காக காவணிப்பாக்கம் வந்தார், அவரை யார், எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை