உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பா.ம.க., பொதுக்குழு கூட்டம்

 பா.ம.க., பொதுக்குழு கூட்டம்

வானுார்: விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க., கிளியனுார் தெற்கு ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் ஜெயன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். நிர்வாகிகள் அரிசங்கர், சுதாகரன், மூர்த்தி, தண்டபாணி, வீரா, ஜோதி, மஞ்சுளா முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் தர்மலிங்கம், மாவட்ட செயலாளர் சங்கர், கடலுார் வடக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் வடிவழகன், மாவட்ட மகளிர் அமைப்பு செயலாளர் அமிர்தம்மாள் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், கிளியனுார் ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களிலும் கிளை கூட்டம் நடத்தி, உறுப்பினர்களை சேர்ப்பது. தேற்குணம் ஊராட்சியில் முருக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் கிரஷர் தொழிற்சாலையால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு செல்வதற்காக நீர்நிலை ஓடையை ஆக்கிரமித்து விட்டதால், ஏரிக்கு செல்ல வேண்டிய நீர் வரத்து குறைந்து விட்டது. எனவே இந்த தொழிற்சாலை இயங்குவதற்கு தடை செய்ய வலியுறுத்தி பா.ம.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி