உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விதிமுறை மீறிய கல்குவாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் மனு

விதிமுறை மீறிய கல்குவாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் மனு

விழுப்புரம்: மரக்காணம் அருகே உரிமம் பெறாமல், விதிமுறை மீறி இயங்கும் கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.மரக்காணம் அருகே கீழ்அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், அளித்த மனு:கீழ்அருங்குணம், நல்முக்கல், ஏந்துார், டி.நல்லாளம், வெள்ளகுளம் ஆகிய கிராமங்களில் பல தனியார் கல்குவாரிகள் உரிமம் பெறாமல் செயல்படுகிறது. இந்த குவாரிகளில் எடுக்கும் அளவுக்கு அதிகமான ஆழத்தால் கிராமத்தில் நிலத்தடி நீர் குறைந்து குடிநீர், விவசாய பாசனத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.இந்த குவாரிகளில் வைக்கும் வெடிகளால் அருகே உள்ள வீடுகள், பள்ளிகள், கோவில்கள், கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டு மிகுந்த சேதமாகிறது. சில தருணங்களில் உயிர்ச் சேதமும் ஏற்படுகிறது.கல் குவாரிகளில் உடைக்கும் கற்களிலிருந்து உருவாகும் பவுடர் புகையால் மயக்கம், தலைவலி, வாந்தி, சுவாச கோளாறு ஆகிய உடல் உபாதைகள் ஏற்படுகிறது. முறைகேடான முறையில் குவாரிகளில் கல்வெட்டி எடுக்கின்றனர்.ஒவ்வொரு வண்டிக்கும் ஒரு நடைசீட்டு வைத்து கொண்டு அதையே 5 நாட்கள் வைத்து ஓட்டுவதால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பீடு ஏற்படுகிறது.இந்த கல் குவாரிகளை நேரடியாக ஆய்வு செய்து, உரிமமின்றி செயல்படும் குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற கல் குவாரிகள் அரசு விதிமுறையில் செயல்பட நடவடிக்கை எடுத்து கிராம மக்களின் தண்ணீர் பற்றாக்குறை, மக்களின் சுகாதாரத்தையும் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை