உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் ரூ.13 லட்சம் பணம், நகைகள் திருட்டு

 ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் ரூ.13 லட்சம் பணம், நகைகள் திருட்டு

விழுப்புரம்: திண்டிவனத்தில் ஓய்வுபெற்ற உதவி கல்வி அலுவலர் வீட்டில் ஆறரை சவரன் நகைகள் மற்றும் 13 லட்சம் ரூபாய் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திண்டிவனம் அடுத்த ரோஷணை காலனியைச் சேர்ந்தவர் ராமு, 73; ஓய்வுபெற்ற உதவி கல்வி அலுவலர். இவர், கடந்த 12ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் வசிக்கும் தனது மகளை பார்க்கச் சென்று விட்டார். நேற்று மதியம் 12:00 மணியளவில் திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து உள்ளே பீரோவை உடைத்து அதிலிருந்த ஆறரை சவரன் நகைகள் மற்றும் 13 லட்சம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில், ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை