உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  சப்கலெக்டர் அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர்.,திருத்தப் பணி கூட்டம்   

 சப்கலெக்டர் அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர்.,திருத்தப் பணி கூட்டம்   

திண்டிவனம்: திண்டிவனம் சப்கலெக்டர் அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர்.திருத்த பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு எஸ்.ஐ.ஆர்.,திருத்த பணி தொடர்பான இறப்பு, இடமாற்றம், இரட்டை பதிவு உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியல் கடந்த 3 ம் தேதி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு திண்டிவனம் சப்கலெக்டர் மூலம் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட பட்டியலில் ஏதாவது ஆட்சேபனை குறித்த ஆலோசனை கூட்டம், திண்டிவனம் சப்கலெக்டர் அலுவலத்தில் நடந்தது. சப்கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தி.மு.க., சார்பில் மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், அ.தி.மு.க.,சார்பில் எம்.எல்.ஏ.,அர்ஜூனன், திண்டிவனம் நகர செயலாளர் ரூபன்ராஜ், பா.ஜ.,சார்பில் மாவட்ட துணை தலைவர் எத்திராஜ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சி பிரதிகள் வழங்கப்பட்ட பட்டியலில் ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி