உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாலிபர் தற்கொலை மனைவி போலீசில் புகார். 

வாலிபர் தற்கொலை மனைவி போலீசில் புகார். 

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே வயிற்று வலி தாளாமல் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.விக்கிரவாண்டி அடுத்த ஆத்திக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன்,24: கூலித் தொழிலாளி.இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதி பட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு 7.00 மணியளவில் வயிற்று வலி அதிகமானதால் , வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனது வேட்டியால் மின் விசிறியில் துாக்கு போட்டுக் கொண்டார்.உடனே அவரை காப்பாற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இவருக்கு கவுதம் என்ற ஒன்னரை வயதில் மகன் உள்ளார்.அன்பரசன் மனைவி வைஷ்ணவி புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி