உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருநாவலூர் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் இல்ல திருமண விழா

திருநாவலூர் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் இல்ல திருமண விழா

உளுந்துார்பேட்டை : திருநாவலுார் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் செண்பகவேல் இல்ல திருமண விழா நடந்தது.திருநாவலுார் அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர், விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் செண்பகவேல், முன்னாள் ஒன்றிய சேர்மன் சந்திரலேகா. இவர்களின் மகள் ஜெய்ஸ்ரீக்கும், புதுச்சேரியைச் சேர்ந்த வைரக்குமார் - வெண்ணிலா தம்பதி மகன் டாக்டர் அரவிந்த்குமாருக்கும், வானுார் பிருந்தாவன் கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடந்தது.திருமணத்திற்கு வருகை தந்த அ.தி.மு.க., பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் பழனிசாமி தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட செயலாளர் சண்முகம், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு முன்னிலை வைத்தனர். ஒன்றிய செயலாளர் செண்பகவேல், சந்திரலேகா தம்பதி வரவேற்றனர்.விழாவில் முன்னாள் அமைச்சர்கள் மோகன், சம்பத், மாவட்ட செயலாளர்கள் சேலம் புறநகர் இளங்கோவன், கடலுார் ராஜேந்திரன், அருண்மொழிதேவன், பாண்டியன், எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், சக்கரபாணி, அர்ஜூனன், ராதாகிருஷ்ணன்.தமிழ்நாடு மாநில கூட்டுறவு சர்க்கரை இணைய முன்னாள் தலைவர் ஞானமூர்த்தி, பண்ருட்டி முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம், ஜெ.. பேரவை மாநில துணைச் செயலாளர் சிவசுப்ரமணியன், முன்னாள் எம்.பி., காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் முருகுமாறன், அழகுவேல்பாபு, பிரபு.தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இணைய தலைவர் ராஜசேகர், மாவட்ட அவைத் தலைவர் பச்சையாபிள்ளை, ஜெ, பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல், குறிஞ்சிப்பாடி ஒன்றிய சேர்மன் குணசுந்தரி சுப்ரமணியன், ஒன்றிய செயலாளர்கள் மணிராஜ், சந்திரன், ஏகாம்பரம், ராமலிங்கம், மாணவரணி மாவட்ட செயலாளர் பாக்கியராஜ், முன்னாள் ஒன்றிய துணைச் சேர்மன் சாய்ராம் உட்பட பலர் பங்கேற்றனர்.மாவட்ட துணைச் செயலாளர் பரமாத்மா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை