| ADDED : நவ 22, 2025 04:46 AM
திண்டிவனம்: திண்டிவனத்திலிருந்து 2 புதிய வழித்தடங்களில் அரசு டவுன் பஸ் இயக்கும் நிகழ்ச்சி நடந்தது. திண்டிவனத்திலிந்து ஏவலுார் வழியாக அம்மணம்பாக்கம் (சி.26), மற்றும் திண்டிவனத்திலிருந்து கூச்சிக்குளத்துார் வழியாக மேல்மருவத்துார் வரை செல்லும் (121ஐ) என இரண்டு புதிய வழித்தடங்களில் அரசு டவுன் பஸ் இயக்க விழா நடந்தது. திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், மஸ்தான் எம்.எல்.ஏ., கொடியசைத்து துவக்கி வைத்தார். அரசு போக்குவரத்துக் கழக திண்டிவனம் கிளை மேலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், துணை சேர்மன் ராஜாராம். தி.மு.க., நகர செயலாளர் கண்ணன், முன்னாள் செயலாளர் கபிலன், செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, ஏவலுார் ஊராட்சி தலைவர் தயாளன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ரமேஷ், பாபு, வழக்கறிஞர் அசோகன், நகர துணைச் செயலாளர் கவுதமன் உட்பட பலர் பங்கேற்றனர்.