உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் தொகுதி பா.ஜ., கலந்தாய்வு கூட்டம்

விழுப்புரம் தொகுதி பா.ஜ., கலந்தாய்வு கூட்டம்

விழுப்புரம்; விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், தேர்தல் கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது.விழுப்புரம் மாவட்ட தலைவர் கலிவரதன் மேற்பார்வையில், விழுப்புரம், திருக்கோவிலுார், விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை தொகுதி வாரியாக தேர்தல் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. விழுப்புரத்தில் உள்ள மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, விழுப்புரம் தொகுதி அமைப்பாளர் சதாசிவம் தலைமை தாங்கினார்.தொகுதி இணை அமைப்பாளர் ராம ஜெயக்குமார், பொறுப்பாளர் சுகுமார் முன்னிலை வகித்தனர்.இதில், வரும் லோக்சபா தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. தொகுதி அமைப்பாளர்கள், மண்டல மையக்குழு நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை