உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மக்கள் தொடர்பு முகாமில் 111 பேருக்கு நலத்திட்ட உதவி

மக்கள் தொடர்பு முகாமில் 111 பேருக்கு நலத்திட்ட உதவி

வானுார்: வானுார் அடுத்த கீழ்கூத்தப்பாக்கம் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.முகாமிற்கு ஆர்.டி.ஓ., காஜா ஷகுல் ஹமீது, சேர்மன் உஷா முன்னிலை வகித்தனர். தாசில்தார் நாராயணமூர்த்தி வரவேற்றார்.கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசுகையில், 'அரசு அலுவலர்களை தேடி வந்து மனு வழங்கிய நிலையை மாற்றி, அரசு அலுவலர்கள், மக்கள் வசிக்கும் பகுதிக்கே வந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று தீர்வு வழங்கிட வேண்டும் என்பதே மக்கள் தொடர்பு முகாமின் நோக்கம்.முகாமில், முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதல்வரின் முகவரி, மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம், எம்.பி., - எம்.எல்.ஏ., உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மூலம் பெறப்பட்ட மனுக்கள் தீர்வு காணப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.கீழ்கூத்தப்பாக்கம் கிராமத்தில், 11 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், 42 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம் உட்பிரிவும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், 9 பயனாளிகளுக்கு 1.61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.மேலும், 12 பயனாளிகளுக்கு 11.51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை, தோட்டக்கலைத் துறையின் சார்பில், 20 பயனாளிகளுக்கு 6.23 லட்சம் ரூபாய், வேளாண்மைத்துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு 3.64 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி என 111 பயனாளிகளுக்கு 23 லட்சத்து 15 ஆயிரத்து 291 ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது' என்றார்.தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முகுந்தன், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பெரியாசாமி, வேளாண்மைதுறை உதவி இயக்குனர் எத்திராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை